[ Actor Madhavan ] பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன் மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்திப்பு !!-01

[ Actor Madhavan ] பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன் மற்றும் விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்திப்பு


இஸ்ரோ விஞ்ஞானி திரு.நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மைய கருவாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் ராக்கெட்ரி . இத்திரைப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளதோடு அவரே இப்படத்தை இயக்கியும் உள்ளார் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடிகர் சூர்யா, ஷாருக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்

தமிழ் ,ஹிந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

Actor

இந்நிலையில் நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் இருவரும் பிரதமர் மோடியை சாதித்துள்ளனர். இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சில நாட்களுக்கு முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடியே நானும் நம்பி நாராயணனும் சென்று சந்தித்தோம் ராக்கெட்ரி படத்தின் சில காட்சிகளை பிரதமருக்கு போட்டுக் காட்டினோம் நம்பி நாராயணன் மீது உள்ள தவறான புரிதல் குறித்து உரையாடினோம் எனவும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறியுள்ள நடிகர் மாதவன் பிரதமர் மோடியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


Star Tamil News                    Actor Madhavan

Leave a Reply

%d bloggers like this: