01-அதிமுக கூட்டணியில் நடிகர் கார்த்திக் – உசிலம்பட்டி தொகுதியில் போட்டி ?

அதிமுக கூட்டணியில் நடிகர் கார்த்திக் ! – உசிலம்பட்டி தொகுதியில் போட்டி ?

நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக அதிமுக ஆகிய இரு அணிகளிலும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டி விட்டது ஓரிரு தினங்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக

Actor karthik

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பிரதான கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு விட்டன தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது  இந்நிலையில் தற்போது சிறிய கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது அதன்படி ஜான் பாண்டியன் கட்சி , மூவேந்தர் முன்னேற்ற கழகம் , நடிகர் கார்த்திக்கின் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .

அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நடிகர் கார்த்திக்கை உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன நடிகர் கார்த்திக்கு தென்மாவட்டங்களில் குறிப்பிடத்தகுந்த இளைஞர்கள் ஆதரவு பட்டாளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தென் மாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக்கை பிரச்சாரம் மேற்கொள்ள வைக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

%d bloggers like this: