[ Actor Chelladurai ] நடிகர் செல்லத்துரை காலமானார் !! -02

[ Actor Chelladurai ]

நடிகர் செல்லத்துரை காலமானார்


விஜயின் கத்தி, தெறி, தனுஷின் மாரி, ரஜினிகாந்தின் சிவாஜி உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் செல்லதுரை அவருக்கு வயது 84. சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

நடிகர் செல்லத்துரையின் மரண செய்தி குறித்து அறிந்தவர்கள் இந்த ஆண்டு திரைத்துறையினருக்கு கருப்பு ஆண்டு அமைந்துள்ளது எனவும் தொடர்ந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

 

கடந்த 17ம் தேதி தான் நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து நேற்று மாலை நடிகர் செல்லதுரை இறந்திருக்கிறார். இன்று அதிகாலை 3 மணிக்கு பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கேவி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 54 வயதான கேவி.ஆனந்தின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் அடையாறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor-chelladurai

இன்னும் இந்த ஆண்டு எத்தனை இழப்புக்கள் ஏற்பட போகின்றதோ என வருத்தமாக தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் செல்லதுரை மற்றும் கேவி.ஆனந்த் ஆகியோரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.


Star Tamil News  |  Actor Chelladurai

Leave a Reply

%d bloggers like this: