[ Aandipatti ] கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை காப்பாற்ற சென்ற கணவரும் பலி !! -01

[ Aandipatti ]

கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை காப்பாற்ற சென்ற கணவரும் பலி


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனைவியை மீட்க சென்ற கணவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள பெருமாள்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்த சசிக்குமார் மற்றும் அவரது மனைவி அழகுராணி. இந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி சிறுசிறு குடும்ப தகராறுகள் ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு அழகு ராணி சென்றுவிட்டார். இதனால் மன வேதனையடைந்த கணவர் சசிக்குமார் அழகு ராணியை சமாதானப்படுத்த மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் அங்கு மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Aandipatti
Also Read : தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் !!

இதன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான அழகு ராணி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்காலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். தனது கண் முன்னே மனைவி தற்கொலை செய்துகொள்வதை பார்த்த கணவர் சசிகுமார் மனம் தாளாமல் தானும் கிணற்றில் குதித்துள்ளார்.

கிணற்றில் குதித்த கணவன் மனைவி இருவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!


Star Tamil News  | Aandipatti

Leave a Reply

%d bloggers like this: