[ Raja ] தனது அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஆ.ராசா !! -03

[ Raja ]

தனது அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் ஆ.ராசா


தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திமுக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வரின் தாயாரை பற்றி தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதை தொடர்ந்து ஆ.ராசா மீது அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் குறித்து லியோனி, ஆ.ராசா உள்ளிட்ட திமுகவினரின் பேச்சு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில் திமுகவினரின் இந்த தரக்குறைவான பேச்சுக்களால் பெண்கள் மத்தியில் திமுக மீது வெறுப்புணர்வு ஏற்படும் என்கிற ரீதியில் இந்த விவகாரம் சென்று கொண்டுள்ளது.

A-raja

இதுகுறித்து விளக்கமளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ராசா தனது கருத்து வெட்டி ஒட்டி தவறாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினர் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும் அதனை மீறக் கூடாது என தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா ஸ்டாலின் மற்றும் முதல்வரின் அரசியல் ஆழுமை பற்றி பேசி அதற்க்கு விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன். எனது பேச்சு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காயப்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


Star Tamil News                                 A.Raja

Leave a Reply

%d bloggers like this: