[ Hajj Pilgrims ] ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம் !!

[ Hajj Pilgrims ]

ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள 2 தவணை கொரோனா தடுப்பூசி கட்டாயம்


இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கட்டாயம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

Hajj-pilgrims

 

சிறுபான்மையினர் நலத்துறை அறிவிப்பு

சவுதி அரேபியா சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் ஜித்தாவில் நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மின்னஞ்சலின்படி சவுதி அரேபியாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அங்கு புறப்படுவதற்கு முன்பு கட்டாயம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என மும்பை இந்திய ஹஜ் யாத்திரை குழு அறிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த பயணிகள் 2021ல் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள ஜூன் மாத மத்தியில் இருந்து புறப்பாடு விமானங்கள் இயங்கும். ஹஜ் 2021க்கு விண்ணப்பித்தவர்கள் இப்போது தாங்களாகவே முன்வந்து முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி அவர்களுக்கு செலுத்த வேண்டியதாய் இருக்கும். எனவே பயணத்தில் இடையூறு ஏற்படாத வண்ணம் இருக்க பயணிகள் முன்கூட்டியே தடுப்பூசி செலுத்திக்கொண்டு தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2021 ஹஜ் பயணம் தொடர்பாக இதுவரை சவுதி அரேபியா அரசிடமிருந்து அதிகார பூர்வ தகவல் எதுவும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹஜ் 2021ன் அனைத்து வழிமுறைகளும் சவுதி அரேபியா அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும் என சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


Star Tamil News |  Hajj Pilgrims

Leave a Reply

%d bloggers like this: