[ Covid-19 Vaccine ] கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள 1.33 கோடி இளைஞர்கள் முன்பதிவு !!

[ Covid-19 Vaccine ]

கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள 1.33 கோடி இளைஞர்கள் முன்பதிவு


இந்தியாவில் இந்தாண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முதலில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அதன் பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் 3-ம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியை நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு வந்து 18 நிரம்பியவர்கள் போட்டுக்கொள்ள அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான 18 வயதானவர்கள் கோவிட் இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முன்பதிவு ஏப்ரல் 28ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இந்தியா முழுவதும் covid-19 தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். 28 ஆம் தேதி முன்பதிவு தொடங்கிய உடனேயே பலர் முன்பதிவு செய்ய துவங்கி விட்டனர். ஒரே சமயத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றதால் OTP என்னும் ஒரு நேர கடவுச்சொல் கிடைப்பதில் மிக தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் பலர் காத்திருந்து பதிவு செய்தனர்.

Covid-19-Vaccine

அந்த வகையில் முதல் நாள் முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திற்குள் சுமார் 35 லட்சம் பேரும், 3 மணி நேரத்திற்குள் 80 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துவிட்டனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

24 மணி நேரத்திற்குள்ளாக சுமார் 1.33 கோடி பேர் இவ்வாறு முன்பதிவு செய்துள்ளனர் எனவும், இந்தியாவில் 18 முதல் 44 வயதினர் வரை 59.46 கோடிப்பேர் இருக்கின்றனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.


Star Tamil News    |     Covid-19 Vaccine

Leave a Reply

%d bloggers like this: