01-எதிர்த்துப் போட்டியிட யாரும் இல்லாததால் எளிதாக இரண்டு  ராஜ்யசபா இடங்களை வென்றது பாஜக

  எதிர்த்துப் போட்டியிட யாரும் இல்லாததால் எளிதாக இரண்டு  ராஜ்யசபா இடங்களை வென்றது பாஜக

 

குஜராத் மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்கள் மறைவால் காலியாக இருந்த ராஜ்யசபா இடங்களுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது இதில் போட்டியிட பாஜகவை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் பாஜகவை சேர்ந்த இரண்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

Bjp victory

 முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான திரு அகமது பட்டேல் மறைவு மற்றும் மேலும் ஒரு பாஜக ராஜ்ய சபா உறுப்பினர் மறைவால் இரண்டு  இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது இந்த தேர்தலில் பாஜக சார்பாக இரண்டு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் ஆனால் காங்கிரஸ் இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்தது அக்கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 95 ஆக உயர்ந்துள்ளது மேலும் அடுத்த சில வருடங்களில் மேற்குவங்கத்தில் இருந்தும் பாஜக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வாகும் பட்சத்தில் பாஜகவின் பலம் மேலும் உயரக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்

Leave a Reply

%d bloggers like this: