புதுச்சேரி அரசியல் சதுரங்கம்  நாளை பெரும்பான்மையை நிரூபிப்பாரா  நாராயணசாமி | வாக்கெடுப்புக்கு முன் ராஜினாமா திட்டமா ?

புதுச்சேரி அரசியல் சதுரங்கம்  நாளை பெரும்பான்மையை நிரூபிப்பாரா  நாராயணசாமி | வாக்கெடுப்புக்கு முன் ராஜினாமாவா ?

புதுச்சேரி:

புதுச்சேரி அரசியலில் தனிகாட்டு ராஜாவாக வலம் வருபவர் அம்மாநில முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் தலமையுடன் அவர் கொண்ட நெருக்கமே அவர் நீண்ட காலம் புதுச்சேரி அரசியலில் ஆதிக்கம் செலுத்த காரணம் இதுவே பல பேர் கண்ணை உருத்தியது அதுபோக தனது ஆட்சிகாலம் முழுவதும் துணை நிலை ஆளுநருடன் சண்டை போடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார் தினமும் ஆளுனருக்கு எதிராக அறிக்கை விடுவது என காலத்தை கடத்துகிறார் மக்கள் பணியில் அவர் கவனம் செலுத்தவில்லை என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் குற்றம்சாட்டி வந்தனர் இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நமச்சிவாயம் ஜான்குமார் போன்ற 4 எம்.எல்.ஏ கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர்.

Pondicherry floor test

இதனால் பெரும்பான்மையை இழந்தது புதுச்சேரி அரசு இந்த அரசியல் பரபரப்புக்கு இடையே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா கவர்னராக இருக்கும் தமிழசை சவுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டர் அவரும் பதவியேற்ற சூடோடு நாராயணசாமி அரசை திங்கள் மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் . இது தொடர்பாக எம்.எல்.ஏகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் நாராயணசாமி கூட்டணி கட்சியான திமுக மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் புதுச்சேரி திமுகவும் நாராயணசாமி மீது அதிருப்தியில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது . மேலும் நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் உரையை நிகழ்த்திவிட்டு வாக்கெடுப்புக்கு முன் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யகூடும் என கருத்து புதுச்சேரி அரசியலில் நிலவுகிறது

Leave a Reply

%d bloggers like this: