புதுசேரியில் ராகுல் காந்தி பேச்சு – மத்திய அமைச்சர் கிண்டல்!!

புதுச்சேரி:

இன்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கல்லூரி மாணவர்கள் மற்றும் மீனவ மக்களிடம் உறையாடினார்.

Rahul gandhi

பரபரப்பான புதுச்சேரி அரசியல் சூழலில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி மீனவர்கள் மத்தியில் ராகுல் காந்தியின் பேச்சு சமூகவளை தளங்களில் கடுமையான கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

மீனவர்களிடம் அவர் பேசும் போது மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டங்களை கடுமையாக சாடினார் அதன் தொடர்ச்சியாக மீனவர்களும் விவசாயிகள் தான் நீங்கள் கடல் விவசாயிகள் என பேசி மீனவர்களை உருக வைத்தார் .

உருகிய ஈரம் காய்வதற்குள் அடுத்த பந்தை நோ பாலாக போட்டு அனைவரின் கிண்டல் கேலிக்கு உள்ளாகிவிட்டார் ஆம் மாணவர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என கூறி தனது அறியாமையை வெளிபடுத்தினார் .

ராகுலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய அமைச்சர் திரு.கிரிராஜ் சிங் 2019 லில் மாணவர்களுக்கு என தனி அமைச்சகம் மத்திய அரசால் ஏற்படுத்தபட்டு விட்டது இதை ராகுல் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என டுவிட் செய்தார் அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் ராகுல் .

முன்னதாக மூதாட்டி ஒருவர் புயல் நேரத்தில் முதல்வர் நாராயண சாமி எங்களை ஒரு எட்டுகூட வந்து பார்க்கவில்லை என கூறியதை நாராயணசாமி தப்பாக மொழிபெயர்ப்பு செய்து நேக்காக எஸ்கேப் ஆனதும் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

%d bloggers like this: