தங்கம் விலை தொடர் சரிவு – மேலும் விலை குறையுமா? !!

சென்னை:

             தங்கம் விலை தொடர் சரிவு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

Today gold price

கொரானா காரணமாக கடந்த வருடம் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது வீழ்ச்சி அடைய தொடங்கியுள்ளது.

கொரானா நோய் பரவலால் உலக நாடுகள் முழு அளவில் லாக்டவுன் அறிவித்தது இதனால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது எனவே முதலீட்டாளர்கள் தாங்கள் முதலீட்டுக்கு பாதுகாக்க அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்தனர் .

இதன் காரணமாக தங்கத்தின் விலை வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்தது.

இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கபட்டனர் சென்னையை பொறுத்தவரை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 1கிராம்  5410 என்கிற வரலாற்று உச்ச விலைக்கு விற்பனை செய்யபட்டது.

இந்த வருடம் தடுப்பூசிகள் வரவு மற்றும் கொரானாவின் தாக்கம் உலகளவில் மெல்ல மெல்ல குறைய தொடங்கிய உடன் தங்கத்தின் மீதான தங்கள் முதலீடுகளை முதலீட்டாளர்கள் குறைத்து மற்ற துறைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளதால் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்துள்ளது .

அதன் படி இன்று சென்னையில் 1கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 4393 என்கிற விலையில் விற்பனை செய்யபட்டு வருகிறது.

த்

Today Gold rate

ஆறு மதங்களில் கிராமுக்கு 1000 ரூபாய் அளவு சரிவை சந்தித்துள்ளது இது மேலும் குறையவே அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர் அதன் படி அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கிராம்  3950 என்கிற அளவு வரை குறைய வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.

 

Leave a Reply

%d bloggers like this: