இலங்கையில் ஏன் பாஜக ஆரம்பிக்க முடியாது? நாம் இலங்கை தேர்தலில் வென்று டெல்லி நாடாளுமன்றம் செல்வோம் – இலங்கை முன்னாள் எம்.பி பரபரப்பு பேட்டி

யாழ்ப்பாணம்:

இலங்கையில் ஏன் பாரதிய ஜனதா என்கிற பெயரில் கட்சி ஆரம்பிக்க கூடாது இலங்கை தேர்தலில் வென்று டெல்லி நாடாளுமன்றம் செல்வோம் என  இலங்கை முன்னாள் எம்.பி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார் .

Bjp in srilanka

இந்திய எம்பி ஒருவர் அமித்சாவை பற்றி கூறும் போது அமித்சாவின் கனவு பாஜக இந்தியாவை மட்டும் ஆள வேண்டும் என்பது மட்டும் அல்ல இலங்கை , நேப்பாளத்திலும் பாரதிய ஜனதா கட்சி தொடங்க வேண்டும் என்பதே என கூறினார் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் வண்ணம் இலங்கையின் தேர்தல் ஆணையம் இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிக்க முடியாது என குறிப்பிட்டது.

Bjp in srilankaBjp in srilanka

இலங்கை தேர்தல் ஆணையத்தின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இலங்கையின் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது ஏன் பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் ஆரம்பிக்க கூடாது கம்யூனிஸ்ட் கட்சி பல நாடுகளிலும் இருக்கும் போது சித்தாந்ததின் அடிபடையில் பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் அமைவது தவறு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் இலங்கை இந்தியாவையும் அமெரிக்கவையும் பகைத்து கொண்டால் அந்த நாட்டு ராணுவங்கள் இங்கு காலடி எடுத்து வைக்கும் இலங்கை இரண்டு மாகாணமாக பிரிக்கப்பட்டு நாம் தேர்தலில் நின்று வெற்றி பெற்று டெல்லி நாடாளுமன்றம் செல்ல வேண்டியது இருக்கும் என அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

Leave a Reply

%d bloggers like this: